• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

காதல் திருமணம் செய்துகொண்ட மகள்; காதலனின் தந்தை கொலை!

Byகுமார்

Mar 5, 2022

மதுரை திடீர் நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சிவ பிரசாந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சடையாண்டி என்பவரது மகள் சினேகா ஆகியோர் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து மற்றும் திடீர் நகர் காவல் நிலையத்திற்க்கு சென்று பாதுகாப்பு கேட்டனர்.

அதனை தொடர்ந்து போலீசார் இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரசம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த நிலையில் சிவ பிரசாந்தின் தந்தை ராமச்சந்திரன் மட்டும் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களிடம் மகனின் திருமணத்தில் எதிர்ப்பை நீக்கிக்கொண்டதாகவும், சினேகாவின் தந்தை சடையாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் சமரச பேச்சுவார்த்தைக்கு காவல் நிலையத்திற்கு வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனையடுத்து நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே ராமச்சந்திரனை சந்தித்த சடையாண்டி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதனையடுத்து சடையாண்டி தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ராமசந்திரன் உயிரிழந்தார். இதனையடுத்து சடையாண்டி காவல்நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சடையாண்டி திடீர் நகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.