திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நாளை முதல் தரிசன டிக்கெட் வெளியிட இருப்பதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு முன்னதாகவே தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு திருமலை தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு தரிசன டிக்கெட் இந்த மாதம் மே 24 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைப் போலவே ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டிக்கெட் மே 23ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.