• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

“டாண்டீ” தொழிலாளர்கள் அச்சபட தேவையில்லை” – பா.மு.முபாரக்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள டாண்டீ தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களான தொமுச, AITUC, INTUC, CITU ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை 2.11.2022 மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து
டாண்டீ தொழிலாளர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து, கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர்.

அப்போது, மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் பேசும்போது, டாண்டீ தொழிலாளர்கள் யாரும் எவ்வித அச்சமும் பட தேவையில்லை, தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களும் தொடர்புடைய அரசு அதிகாரிகளுடன் இன்று கலந்தாலோசித்து வருகிறார்கள். இது குறித்த முழு விவரங்களையும் நாங்கள் கலந்து பேசி வருகிறோம்.

எனவே, கண்டிப்பாக டாண்டீ தோட்ட தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் கூறியதோடு, தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட கழகம் முன்னின்று செய்யும் எனவும் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தோட்ட தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க துணை பொது செயலாளர் TKமாடசாமி, தொமுச நிர்வாகிகள் சந்திரன், அண்ணாதுரை, கிருஷ்ணமூர்த்தி, குமார், அன்பழகன், CITU சந்திரகுமார், INTUC யோகநாதன், AITUC பெரியசாமி ஆகியோர் உட்பட கூடலூர் தொகுதி ஒன்றிய-நகர-பேரூர் செயலாளர்கள் லியாகத் அலி, பாபு, சிவானந்த ராஜா, சேகரன், சின்னவர், சுப்பிரமணி, உதயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.