• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு..!

Byவிஷா

Jan 1, 2024

இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, வணிகப்பயன்பாட்டு சிலண்டர் ரூ.4.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 22ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.39.50 குறைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை நேற்று வரை ரூ.1929க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ஜனவரி 1ம் தேதி முதல் சிலிண்டருக்கு ரூ.4.50 குறைந்து ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தின் அடிப்படையில் வீடு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று ஜனவரி 1ம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ4.50 குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.