• Wed. Dec 11th, 2024

புத்தாண்டை முன்னிட்டு அமலுக்கு வந்த அதிரடி மாற்றங்கள்..!

Byவிஷா

Jan 1, 2024

இன்று 2024 புத்தாண்டை முன்னிட்டு, யுபிஐ கணக்கு முதல் சிம்கார்டு வரையில் நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிஜிட்டல் இந்தியாவில் வணிக பரிமாற்றங்கள் முதல் தனிப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள் வரை யுபிஐ கணக்கு அவசியம். இந்த யுபிஐ கணக்குகளில் எவையேனும் தொடர்ந்து 18 மாதங்களுக்கு செயல்பாட்டில் இல்லாவிடில் அவை இன்று ஜனவரி 1ம் தேதி முதல் முடக்கப்பட இருக்கின்றன.
அதே போன்று வங்கி லாக்கர் விதிகளிலும் மாற்றங்கள் வருகின்றன. திருத்தப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளில் கையெழுத்திடாத வாடிக்கையாளர்களின் வங்கி லாக்கர் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்படுகிறது.
இன்று முதல் வங்கி லாக்கர்களில் வைக்கப்படும் பொருட்கள் உட்பட பல்வேறு விதிமுறைகள் தொடர்பாக, வங்கி நடைமுறைகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் அடங்கிய ஒப்பந்தத்தை சரிபார்க்க உடனே உங்க வங்கி கிளையை அணுகுங்கள்.
இன்று முதல் புதிதாக சிம் கார்டுகள் பெறுவதில் முறைகேடுகளை தடுக்கவும் தவிர்க்கவும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன. வாடிக்கையாளர் விவரங்களை சேகரிக்கும் கேஒய்சி நடைமுறையில் பேப்பர் அல்லாது டிஜிட்டல் வகையில் அவை மாற்றம் பெறவுள்ளன. மற்றபடி சிம் கார்டுகளை பெறுவதில் வழக்கமான நடைமுறைகளே தொடரும். வாடிக்கையாளர்களைவிட முகவர்களுக்கான நடைமுறைகளில் அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் பெற்றிருக்கும் பயனாளிகளுக்கான அறிவிப்பு இது. ஒரு சில வட மாநிலங்களில் அமலில் உள்ள இந்த திட்டத்தின் கீழ், அரசின் வாக்குறுதி அடிப்படையில் தற்போதைய ரூ500 என்ற சிலிண்டர் விலை மேலும் ரூ50 குறைத்து, ரூ450-க்கு கிடைக்க உள்ளது.
இது தவிர, வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 22ம் தேதி ரூ.39.50 குறைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ரூ.4.50 குறைக்கப்பட்டு ஒரு சிலிண்டர் இலை ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.