தமிழ்நாடு சைபர் க்ரைம் குற்ற பிரிவு தலைமையகம் உத்தரவின் படி விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணப்பாளர் சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில் தலைமை பெண் காவலர்கள் பொற்கொடியால் அகிலாரணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

அவர்கள் பேசுகையில் “பாரத பிரதமர் மோடிஜி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பேசுவதாக அழைப்புகள் வந்தால் அதனை நம்பாதீர்கள் , சிறிய அளவு பணம் கொடுத்தால் அதிக அளவு பணம் தருவதாகவும் மெசேஜ் வந்தால் அதை OK கொடுக்க வேண்டாம் என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.