அட்சய திருதியை முன்னிட்டு கரூரில் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8980க்கும் சவரன் ரூ.71840 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நகை கடைகளில் அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், தங்க நகை விற்பனைக்காக பெரும்பாலான நகைக் கடைகள் சலுகைகளை அறிவித்திருந்தன. சிலர் முன் பதிவும் அறிவித்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த முறை கூட்டம் அதிகாமாகவே இருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விற்பனையும் அதையே பிரதிபலிக்கின்றது. அட்சய திருதியை நாளான இன்று தங்கம் வாங்கினால், அடுத்தடுத்து செல்வம் சேரும் என்ற அடிப்படையில் சில மக்கள் குண்டு மணி அளவிலாவது தங்கம் வாங்க வேண்டும் என்று நகைக்கடைகளுக்கு செல்கின்றனர். தங்கம் விலை உயர்வால் சில மக்கள் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாகவே தங்கத்தை முன்பதிவு செய்து தற்போது வாங்கியுள்ளதாக சில வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கரூர் ஜவஹர் கடைத்தெருவில் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகமான நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்றவாறு, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கி சென்றனர். இது குறித்து பெமினா ஜுவல்லரி உரிமையாளர் கியாஜூதீன் கூறுகையில், வருடா வருடம், எங்களது கடைகளில் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை அளித்து வருகின்றோம்.
இந்த வருடம் நகைகளின் செய்கூலி, சேதாரத்தில் பெருமளவு சலுகைகளையும், கூடவே, பெருமாளின் பாதங்கள் கொண்ட இலவச தெய்வீக பொருட்களையும் இலவசமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தந்து வருவதாகவும் தெரிவித்தார். இதே போல், வாடிக்கையாளர் நர்மதா கூறுகையில், வருடா வருடம், அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி காயின்களை வாங்கி வருவதாகவும், அட்சய திருதியை முன்னிட்டு நகைகள் வாங்கினால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம் என்றும் கூறினார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)