• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து தகுதி

Byகாயத்ரி

Dec 15, 2021

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட நடப்பு சாம்பியனான இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டென்மார்க் வீராங்கனை மார்டினா ரெபிஸ்காவுட்அன் ( 72வது ரேங்க்) நேற்று மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-7, 21-9 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிடாம்பி காந்த் (14வது ரேங்க்) 15-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி ஃபெங் லீயை (63வது ரேங்க்) போராடி வென்றார்.விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 9 நிமிடங்களுக்கு நீடித்தது.

மற்றொரு இந்திய வீரர் லக்‌ஷியா சென் (19வது ரேங்க்) ஜப்பானின் நிஷிமோடோ கென்டாவை (17வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை 27-25, 21-17 என நேர் செட்களில் சீன தைபேவின் ஜேய் ஹூயி லி – போ-ஹவுசன் யாங் இணையை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறியது.