வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் வெளிநாடு சுற்றுலா புறப்பட தயாராகி வருகிறார்
‘பிக்பாஸ் அல்டிமேட்’, ‘வெந்து தணிந்தது காடு’ ஆகியவை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் லண்டனுக்கு கோடை குதுகலா சுற்றுலா புறப்பட உள்ளார்.
‘மாநாடு’ படம் மூலம் சினிமாவில் கம்பேக் கொடுத்தார் சிம்பு. அந்த படம் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு பிறகு கவுதம் வாசுதேவ் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’, கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்துதல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்து இருந்தது. ‘பத்துதல’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட், வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டதால் ‘பத்து தல’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு சிறிய வெகேஷனுக்காக லண்டன் செல்ல உள்ளார். மேலும் ‘பத்து தல’ படத்திற்காக சிறிது எடையும் கூடியுள்ளார்.
இந்த படத்தில் அவருடைய போர்ஷன் முடிவடைந்து விட்ட நிலையில் சில போர்ஷன்கள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்திற்கு பிறகு கோகுலுடன் ‘கொரோனா குமார்’ படத்தில் இணைய உள்ளார் சிம்பு.