• Mon. Sep 25th, 2023

தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கை கையாண்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டுகள்

‘நான் இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல… இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது.
அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கையாண்டவிதம் அனைவரிடத்திலும் அவருக்குப் பாராட்டைத் பெற்றுத் தந்தது.


அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. தன் பாலின ஈர்ப்பாளர்களின் வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின ஈர்ப்பாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மாற்றுப் பாலினத்தவர் நலன் சார்ந்து மத்திய சமூக நலம் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையை தமிழக அரசின் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் முக்கிய அசம்ங்கள்:
மாற்று பாலினத்தவர் எண்ணிக்கை
சமூக நலம் அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வின்படி தமிழகத்தில் 12,116 மாற்றுப் பாலினத்தவர் உள்ளனர்.
பெற்ற பயன்கள் விவரம்

 1. இதுவரை மாற்றுப் பாலினத்தவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை எண்ணிக்கை: 9277
 2. வழங்கப்பட்ட தையல் இயந்திரங்களின் எண்ணிக்கை: 141
 3. வீடுகள் ஒதுக்கீடு: 515
 4. கல்வி உதவி பெற்றவர்கள்: 9 பேர்
 5. வழங்கப்பட்ட ரேஷன் கார்டு எண்ணிக்கை: 2762
 6. வழங்கப்பட்ட பட்டாக்களின் எண்ணிக்கை: 1743
 7. மருத்துவ காப்பீடு: 1489 பேர்
  மாற்றுப் பாலினத்தவருக்கு அரசு பின்வரும் ஆணைகள்‌ வெளியிட்டிருக்கிறது:
  1) மூன்றாம்‌ பாலினர்‌ என்று பயன்படுத்தப்படும்‌ சொல்லுக்கு மாற்றுப் பாலினத்தவர்‌, திருநங்கைகள்‌, திருநம்பிகள்‌ உள்ளிட்டோரைக்‌ குறிக்கும் வகையில்‌ ‘திருநங்கை’ என்ற சொல் தமிழிலும், Transgender என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது.
  2) மூன்றாம்‌ பாலினர்‌ நல வாரியம்‌ என்ற பெயரை பயன்படுத்தப்படும்‌ வாரியத்திற்கு, மாற்றுப் பாலினத்தவர்‌, திருநங்கைகள்‌, திருநம்பிகள்‌ உள்ளிட்டோர்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ‘திருநங்கைகள்‌ நல வாரியம்‌’ என்று தமிழிலும்‌, Trangender Welfare Board என்று ஆங்கிலத்துலும்‌ கூறப்படுகிறது.
  திருநங்கைகள் உரிமை சட்டம்:
  2019-ஆம் ஆண்டும திருநங்கைகள் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, வாழ்வாதாரம் என அனைத்து நலன்களையும் உள்ளடங்கியுள்ளது.
  அரசு – தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருநங்கைகளுக்காக செயல்படும் கிளினிக்குகள் விவரம்:
  நாமக்கல்: லீகல் எயிட் கிளினிக் – சேந்தமங்கலம்
  திருவள்ளூர்: விடிவெள்ளி திருநங்கைகள் நல சங்கம்
  திரு நெல்வேலி: – திருநங்கைகளுக்கான கிளினிக் – பாளையங்கோட்டை
  மதுரை: லீகல் எயிட் கிளினிக் – எல்லிஸ் நகர்
  தஞ்சவூர்: அன்னை தெர்சா சேவை இல்லம் – தஞ்சாவூர்
  மாற்றுப் பாலினம் தொடர்பாக அரசால் குறிப்பிடப்படும் சொற்கள் விவரம்:
 8. பால்: இது பிறப்பில் தோன்றும் உடற்கூறு சார்ந்த வேறுபாடு. ஊடல் உறுப்புகள். தசைகள் மற்றும் பால் குரோமோசோம்கள் இவை அனைத்தும் ஒருவரது உடற்கூறை நிர்ணயிக்கின்றன, பெரும்பாலும் காணப்படுவது ஆண்பால் அல்லது பெண் பால். சிலருக்கு இரண்டு பால் சம்மந்தப்பட்ட உறுபுக்களும் பிறப்பிலேயே அமைவதுண்டு, இவர்களை
  ‘இன்டர்செக்ஸ்’ என்று அழைக்கிறோம்.
 9. பாலினம்: பாலினம் என்பது ஒருவர் தன்னை அடையாளம் காண உபயோகிக்கும் சொல், ஒருவரது பாலினம் அவரது பாலோடு பொருந்தி இருக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு, உதாரணத்திற்கு ஓர் ஆண். ஆண்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஆணை போன்று தோன்ற வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அனுமானம். ஆண்மையின் வெளிப்பாடு பல கலாச்சாரங்களிலும். காலங்களிலும் வேறுபட்டாலும். சில குணாதிசயங்கள் என்றும் இருந்து வருபவை, இதுபோன்ற எதிர்பார்ப்புகளுக்குள் அடங்காத, பொருந்தாத ஆண்கள் அல்லது பெண்களுக்கென்று இருக்கும் எதிர்பார்ப்புகளுக்குள் அடங்காத, பொருந்தாத பெண்கள் தாழ்ந்தவர்கள், குறைந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்களை கேலி. கிண்டல் செய்வதும் துன்புறுத்துவதும் நடக்கிறது.
 10. பாலீர்ப்பு: இது பாலியல் ரீதியாக ஏற்படும் சார்பு
 11. பாலுறவு நடத்தை: நடைமுறையில் ஒருவர் யாருடன் பாலுறவு கொள்கிறார்கள் என்பதை குறிக்கும்.
 12. பாலுறவு அடையாளம்: ஒருவர் தம்மை எப்படி அடையாளப்படுத்தி கொள்கிறhர்கள், உதாரணம் நங்கை, நம்பி, ஈரர், கோதி, திருநங்கை, ஆரவாணி.
  ஒருவரது பால் அடையாளம் அவர்களது பாலீர்ப்பு மற்றும் பாலுறவு நடத்தையுடன் பொருந்தியோ – பொருந்தாமலோ இருக்கலாம். உதாரணத்திற்கு ஒருவர் நம்மை ‘எதிர்பாலீர்ப்பாளர்’ என்று அடையாளப்படுத்தி கொள்ளலாம். ஆனால் அவருக்கு ஆண் – பெண் என்று இரண்டு பாலினர் மீதும் ஈர்ப்பு இருக்கலாம்.
 13. ஏதிர்பாலீர்ப்பு: ஏதிர்பால் மேல் ஏற்படும் பாலீர்ப்பு. பெண்கள் மேல் பாலீர்ப்பு உடையை ஆண்கள். ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள் (எதிர்பாலீர்ப்பாளர்)
 14. ஒருபாலீர்ப்பு அல்லது தன்பாலீர்ப்பு: தனது பாலின் மீது ஏற்படும் பாலீர்ப்பு. ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடையை ஆண்கள். பெண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள் (தன்பாலீர்ப்பாளர் – ஒருபாலீர்ப்பாளர்).
 15. நம்பி அல்லது ஒரு பாலீர்ப்புள்ள ஆண் அல்லது மகிழ்வன்: தனது பாலின் மீது ஈர்ப்புள்ள ஆண். ஆண்கள் மேல் பாலீர்ப்பு உடைய ஆண்கள், ஆண்களை விரும்பும் ஆண்கள். இவர்களில் சிலர் தங்களை அடையாள படுத்திக்கொள்ள நம்பி (தமிழ்) அல்லது கே ( Gay ஆங்கிலம்) என்ற சொற்களை பயன்படுத்துகிறhர்கள். உதாரணத்திற்கு ஆண்கள் மீது ஈர்புள்ள ஆண்கள் அனைவரும் இந்த சொற்களை உபயோகப்படுத்துவதில்லை. ஏனெனில் இவர்களில் சிலருக்கு பெண்கள் மீதும் ஈர்ப்பு இருக்கலாம்,
 16. நங்கை: தனது பாலின் மீது ஈர்ப்புள்ள பெண். பெண்கள் மேல் பாலீர்ப்பு உடைய பெண்கள். பெண்களை விரும்பும் பெண்கள். இவர்களில் சிலர் தங்களை அடையாள படுத்திக்கொள்ள நங்கை (தமிழ்) அல்லது லெஸ்பியன் (ஆங்கிலம்) என்ற சொற்களை பயன்படுத்துகிறhர்கள்
 17. இருபாலீர்ப்பு: ஆண்-பெண் இருவர் மேலும் ஏற்படும் பாலீர்ப்பு, ஆண்-பெண் இருவர் மேலும் பாலீர்ப்பு உடைய ஆண்கள் மற்றும்பெண்கள் (இருபாலீர்ப்பாளர்கள்), இவர்களின் ஈர்ப்பு இரண்டு பாலினர் மீதும் சம அளவில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல,
 18. ஈரர்: ஆண் மற்றும் பெண் இரண்டு பாலினர் மீதும் ஈர்ப்புள்ளவர்கள்,
  12 . திருநர்: தங்களது பிறப்பு ரீதியான பாலும், பாலினத்தன்மையும் மாறுபட்டதாக உணர்பவர்கள். உதாரணமா, தான் பெண் என்று மன அளவில் நம்பும் ஆண்கள். திருநர்கள் பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வழி முறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம், திருநர்களின் பால் ஈர்ப்பும் எல்லோரையும் போல பன்மைபட்டது.
 19. திருநங்கை: பிறப்பால் ஆண்பாலும், முன அளவில் பெண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள். பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் வழிமுறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம்.
 20. திருநம்பி: பிறப்பால் பெண்பாலும், மன அளவில் ஆண்பாலாகவும் அடையாளம் காண்பவர்கள். பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் வழிமுறைகளை செய்ய விரும்புவர்களாக இருக்கலாம் அல்லது விரும்பாதவர்களாக இருக்கலாம்.
 21. ட்ரான்ஸ்செக்சுவல்: பிறப்பால் ஒரு பாலும், மன அளவில் வேறு பாலினத்துடன் அடையாளம் காண்பவர்கள். மற்றும் இந்த வேறுபாட்டை மாற்ற அறுவை சிகிச்சை அல்லது ஹார்மோன் சிகிச்சை மேற்கொண்டவர்கள் – மேற்கொள்ள விரும்புவர்கள்.
 22. மாறுபட்ட பலபாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (மாற்று பாலின – பாலீர்ப்பு): நங்கை – நம்பி – ஈரர் – திருநர் இவர்கள் அனைவரையும் மொத்தமாக குறிப்பிடும் சொல்.
 23. பலபாலீர்ப்பு: ஆண்-பெண் என்னும் வேறுபாட்டைக் கடந்த பாலீர்ப்பு.
 24. மாற்று பாலின டூ பாலீர்ப்பு சுயமரியாதை: நங்கை – நம்பி – ஈரர் – திருநர் இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் பாலீர்ப்பையும், பால் அடையாளங்களையும் எண்ணி கூனி குறுகாமல். எல்லோரையும் போல தலை நிமிர்ந்து கௌரவமாக, சுய மரியாதையுடன் வாழ்வதையை சுய மரியாதை என்று குறிப்பிடுகிறோம்.
 25. வானவில் – சுயமரியாதை பேரணி: நங்கை – நம்பி – ஈரர் – திருநர் இப்படி மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் தங்கள் பாலீர்ப்பையும்.
  பால் அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் கோற்றும் எல்லா நிகழ்ச்சிகளையும் ‘வானவில் சுயமரியாதை விழா’ என்று அழைக்கிறார்கள்.
 26. வெளியே வருதல்: மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையளம் கொண்டவர்கள் தங்களது அடையாளம் மற்றும் பாலீர்ப்பை அறிந்து ஏற்றுக்கொள்வதையும் பின்பு தங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நண்பர்கள். உறவினர்களுக்கும் அதை தெரிவிப்பதையும் தான் ‘வெளியே வருதல்’ என்று அழைக்கிறோம்.
  21 மாற்றுடை அணிபவர்கள்: எதிர் பாலினர் உடைகளை அணிந்து தங்களது பாலுணர்வை வெளிபடுத்துபவர்களை மாற்றுடை அணிபவர்கள் என்று அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *