• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இனி ஃபேஸ்புக் போலவே வாட்ஸ் அப்பிற்க்கும் கவர் போட்டோ…

Byகாயத்ரி

Feb 15, 2022

மெட்டா நிறுவனத்தின், முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

உலகில் ஏராளமானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில் அந்நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை கொடுத்து வருகிறது. பயனாளர்களை கவரும் வகையில் செயலி மேம்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் மிக பயனுள்ள செயலியாகவும் உள்ளது. இந்நிலையில் ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்க உள்ளது. ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.வாட்ஸ் அப் செயலி மேம்படுத்துப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவம் பீட்டா இணையதளத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம், நாம் புரொஃபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம்.முதற்கட்டமாக, இந்த வசதி வாட்ஸ் அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இந்த சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.