• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பூஸ்டர் டோஸுக்கு கோவாக்சின் பாதுகாப்பானது!

பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து பாரத் பயோடெக் நிறுவன இயக்குனர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை தொடர்ந்து புதிய வகை Omicron வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் உலக நாடுகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் Omicron அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசியினை மக்களுக்கு செலுத்த தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதன் மூலம் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று பலருக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இது குறித்து பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கூறுகையில், கொரோனோவுக்கு எதிரான பூஸ்டர் டோஸுக்கு கோவாக்சின் பாதுகாப்பானது. மேலும் ஆதிக்கம் செலுத்தும் நோய்த்தொற்றுகளை தடுத்து தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாக இருக்கும். கொரோனோவுக்கு எதிராக உலகளாவிய தடுப்பூசியாக இது விளங்கும்.

சோதனை முடிவுகளை குறிப்பிடுகையில் கோவாக்சின் தடுப்பூசியில் தீவிரமான பக்கவிளைவுகள் எதுவும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. தரவுகளின் அடிப்படையில் பாரத் பயோடெக் மூன்றாவது டோஸ் அதிகபட்ச பாதுகாப்பை பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும், என்றார்!