• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மன அழுத்தம் காரணமாக நீதிமன்ற ஊழியர் தற்கொலை.., போலீசார் விசாரணை…

ByKalamegam Viswanathan

Sep 21, 2023

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவர் சிவகங்கை மாவட்டம் மகிளா நீதிமன்றத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வேலை பழு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவர் தனது இல்லத்தில் கை மற்றும் கழுத்தில் பிளேடால் தன்னைத்தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து சம்பவம் குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீஸ்காரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்து எஸ். எஸ். காலனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.