• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மருத்துவ கல்லூரி பேராசிரியரை, சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

சிறையில் இருக்கும் குலசேகரம் மருத்துவ கல்லூரி பேராசிரியரை ஒருநாள் காவலில் சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

குமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மூகாம்பிகை மருத்துவ கல்லூரியின் பேராசிரியர் பரசிவம், மற்றும் இரண்டு பயிற்சி மருத்துவர்கள்.சிபிசிஐடி விசாரணை வளையத்தில், தூத்துக்குடியை சேர்ந்த முதுகலை மருத்துவ மாணவி சுகிர்தாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் என்ற நிலையில், பேராசிரியர் பரமசிவம் பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பயிற்சி மருத்துவர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மற்றும் மாணவர்களிடம். சிபிசிஐடி காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பேராசிரியர் பரமசிவம்தை 5_நாட்கள் காவல்துறை விசாரிக்க அனுமதி கேட்டு, நாகர்கோவில்1_வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்த நிலையில், சிபிசிஐடியினரின் மனுவை ஆய்வு செய்த மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி விசாரித்து.ஒரு நாள் மட்டும் பேராசிரியர் பரமசிவத்தை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து பேராசிரியர் பரமசிவத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த (அக்டோபர்_6)ம் தேதி நடந்த மருத்துவ மாணவி, சுகிர்தாவின் தற்கொலை குமரி மாவட்டத்தில் இன்றும் அணையாத “தீ” நிலையில் மக்களின் மத்தியில் தனியார் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி விவாதமாக உள்ளது.