மாலோயில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
மாலத்தீவின் தலைநகர் மாலோயில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் பற்றிய தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 10பேரில் 8பேர் இந்தியர்கள். அதில் இரண்டு பேர் குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த காஞ்சிரங்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த கணவன், மனைவி. ஜெனில், சுந்தரி. மரணம் அடைந்த தம்பதியர்களின் உறவினர்கள் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை தொடர்பு கொண்டு மரணம் அடைந்த கணவன், மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரிக்கை வைத்தனர்.
விஜய் வசந்த் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் அலுவலகம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மாலோயில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து தம்பதியர்கள் பலி ; உறவினர்கள் கோரிக்கை




