• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி ஆவாரா பி.வி. நாகரத்னா?..

By

Aug 18, 2021

உச்சநீதிமன்றத்திற்கு 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகள் கொண்ட பட்டியலை கொலிஜியம் இறுதி செய்துள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற கொலிஜியம் 9 புதிய நீதிபதிகள் பட்டியலை இறுதி செய்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பிவி நாகரத்னா, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஹிமா கோலி மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி பெலா திரிவேதி ஆகிய பெண் நீதிபதிகளும் இதில் அடக்கம். இதேபோல், கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,சி.டி. ரவிக்குமார் உள்ளிட்டோரின் பெயர்களும் இந்த பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் பட்டியலில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபே ஸ்ரீனிவாஸ், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி ஆகியோரும் உள்ளனர்.இது தவிர உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மாவை நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.இவர்களில் 2027ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள நீதிபதி நாகரத்னா, ஓய்வு பெறுவதற்கு முன் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக வாய்ப்பு உள்ளது.