• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி; சாதனை படைத்தது எந்த மாவட்டம் தெரியுமா?

By

Aug 18, 2021

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

தமிழ் நாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செத்தும் பணிகள் தொடங்கியது.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் அரியலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஆயிரத்து 190 கர்ப்பிணி பெண்களில் 7ஆயிரத்து 023 கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி 98 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தி அரியலூர் சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் மத்திய மண்டலத்தில் உள்ள 5 சுகாதார மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 993 கர்ப்பிணி பெண்களில் 4 ஆயிரத்து 628 பேருக்கும், அறந்தாங்கியில் 7 ஆயிரத்து 682 பேரில் 4 ஆயிரத்து 792 பேருக்கும், புதுக்கோட்டையில் 10 ஆயிரத்து 156 பேரில் 5 ஆயிரத்து 551 பேருக்கும், நாகையில் 6 ஆயிரத்து 233 பேரில் 3 ஆயிரத்து 176 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 98% கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி அரியலூர் மாவட்டம் சாதனனை படைத்துள்ளது.

இதைத்தவிர்த்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தியதில் மத்திய மண்டத்தில் உள்ள மாவட்டங்கள் மிகவும் பின்தங்கி உள்ளது. இதன்படி கரூரில் 5798, தஞ்சாவூரில் 5448, புதுக்கோட்டையில் 3268, திருவாரூரில் 2873, பெரம்பலூரில் 2798, அரியலூரில் 2416, மயிலாடுதுறையில் 2009, நாகையில் 1756, திருச்சியில் 1721 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.