• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

தமிழகம் தான் இதற்கெல்லாம் முன்மாதிரி மாநிலம்… கனிமொழி பெருமிதம்!…

By

Aug 19, 2021

ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி பெருமிதம்.

தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் இல்ல திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசியதவது: தமிழகத்தில் நாம் மதமாச்சாரியங்களை கடந்து நம்முடைய வழிபாட்டு முறை மதநம்பிக்கை வேறுவேறாக இருந்தாலும் நாம் தமிழர் என்ற உணர்வோடு வாழ்ந்து வருகின்றோம்.

தமிழகத்தில் வேற்றுமை வரும் போது நாட்டின் வளர்ச்சி, பெண்கள் நலன், குழந்தைகள் நலன் மற்றும் எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகி விடும் என தெரிவித்தார். திராவிட இயக்க கொள்கைகளை சாதித்து வரும் பெருமை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு என பேசினார்.

இந்த விழாவில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் எம்.பி. டிபிஎம். மைதீன்கான், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, அரசு ஒப்பந்தகாரர் சண்முகவேலு, தொழிலதிபர் ஓணம்பீடி வல்லம் பாலகிருஷ்ணன், உள்பட திமுக முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.