• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சாதாரண சளி காய்ச்சலாக கொரோனா மாறும் – மருத்துவர்கள் கணிப்பு

Byமதி

Oct 9, 2021

சமீப காலமாக ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மருத்துவனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

இதைப்பற்றி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று பேசினார்.
இந்த மாநாட்டில் அவர், கொரோனா வைரஸ் தொற்றானது, சாதாரண ஜலதோஷ வைரஸ் போல மாறிவிடும். ஆனால் அதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். கொரோனா வைரஸ் தொடர்பாக இன்னும் நாம் நிறைய புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. இன்னும் அது பெருந்தொற்றாகத்தான் இருக்கிறது.

அமெரிக்காவில் இந்த வைரசால் வாரத்துக்கு 53 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். ஐரோப்பாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் அங்கு ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைந்து வருகிறது. வடக்கு கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குளிர்காலம் ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. பூட்டிய அறைகளுக்குள் மனிதர்கள் இருப்பதால் தொற்று பரவல் அதிகமாக இருக்கும். இந்திய சீரம் நிறுவனத்துக்கு நான் ரசிகன். இந்தியா சுகாதார அமைப்பில் இன்னும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.