• Fri. Apr 26th, 2024

பதிலடி கொடுத்த சேகர்பாபு!..

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


மேலும் கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி நேற்று பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதோடுமட்டுமல்லாமல், பத்து நாட்களில் கோவில்களை திறக்காவிட்டால் திமுக அரசை ஸ்தம்பிக்க வைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.இந்த நிலையில் தற்போது, அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ள வாடகைதாரர்கள் இணையவழியில் வாடகை செலுத்தும் வசதியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக போன்று 100 பாஜக வந்தாலும் அரசை ஸ்தம்பிக்க செய்ய முடியாது என கூறினார். மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் படியே கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆணைப்படி தான் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே போராட்டம் நடத்துபவர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து, திருவிழாக்களுக்கு அனுமதி, போராட்டம் நடத்த அனுமதி என கடிதம் வாங்கி கொடுத்தால் அதனை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது, என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *