

தமிழ் சினிமாவில் கொரோனா தொற்று தொடங்கியபோது நடிகர் சூர்யா, ஜெயம் ரவி, நடிகை ரோகிணி சமீபத்தில் கமலஹாசன், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தனர் சில நாட்களுக்கு முன் நடிகர் அர்ச்சுன் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் தற்போது நடிகர் விக்ரமிற்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம்பொன்னியின் செல்வன்,மகான் படங்களில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே தான் நடித்து வந்த கோப்ரா படத்தின் எஞ்சிய படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார். அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க தயாரானார். இந்நிலையில் இவருக்கு கொரோனா நோய்க்கான அறிகுறி தென்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயின் தாக்கம் குறைவு என்பதால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து கொண்டு வருகிறார் விக்ரம்.