மதுரை கோட்ட ரயில்வே ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று (15.12.2021) மதுரை ரயில்வே கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் அவர்களது உத்தரவின்படி, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் மற்றும் உதவி நிதி அதிகாரி நிவேதா தேவி ஆகியோர் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. 106 ஓய்வூதியர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்த 94 குறைகளில் 57 குறைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது.
தற்போது அமுலில் உள்ள ஊழியர் நல விதிகளுக்கு கட்டுப்படாத 37 குறைகள் நிராகரிக்கப்பட்டன. ஓய்வூதியர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ரூபாய் 7,08,018 பணபலன்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிதாக 14 குறைகள் விண்ணப்பங்களாக பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உதவி ஊழியர் நல அதிகாரிகள் சிவநாதன், ராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.