• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

40 கோடியை கடந்த கொரோனா தொற்று…

Byகாயத்ரி

Feb 9, 2022

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32.06 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89 ஆயிரத்து 900 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 06 லட்சத்து 03 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 81 ஆயிரத்து 520 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 2,146,430 பேருக்கு உலகம் முழுக்க கொரோனா ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,449 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 162,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 78,539,521 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 932,353 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.அமெரிக்காவில் புதிதாக 162,497 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 78,539,521 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 932,353 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.பிரிட்டனில் தினசரி கேஸ்கள் சட்டென சரிந்துள்ளது. பிரிட்டனில் 17,932,803 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 66,450 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 158,677 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.