• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 96-வது பிறந்த நாள் விழா..,

ByKalamegam Viswanathan

Oct 16, 2026

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 96-வது பிறந்த நாள் விழா, மதுரை சேதுபதி மேனிலைப் பள்ளியில் காவல்துறை மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. K.S. நாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். மதுரைக் கல்லூரி வாரிய உறுப்பினர் திரு. இல. அமுதன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மதுரை தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி, சார்பு ஆய்வாளர் திரு. லிங்ஸ்டன் மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் திரு. அர்ஷத் முபின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு டாக்டர் கலாம் அவர்களின் சுயசரிதைப் புத்தகங்கள், எழுதுகோல்கள் (Pens) மற்றும் இனிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் “நம்ம மதுரை” வினோ, திரு. சுரேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஏராளமான மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக, மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று டாக்டர் கலாம் அவர்களின் ‘இளைஞர் எழுச்சி உறுதிமொழி’யை ஒற்றுமையுடன் ஏற்று, அவரது பாதையைப் பின்பற்றுவதாக உறுதிகொண்டனர். தங்கள் நாளிதழ் அல்லது ஊடகத்தில் இந்தச் செய்தியை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.