நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,754 பேருக்கு தொற்று உறுதி என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,220 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இதுவரை மொத்தமாக 4,36,85,535 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 47 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். மொத்தமாக இதுவரை 5,27,253 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது 1,01,830 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தினசரி சதவீதம் 3.47 ஆகவும், வாராந்திர சதவீதம் 3.90 ஆகவும் உள்ளது. நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.58 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.19 ஆகவும் உள்ளது.
தேசிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 209.27 கோடி 93.90 கோடி 2-வது தவணை மற்றும் 13.18 கோடி முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 31,52,882 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.