• Wed. Apr 24th, 2024

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்கள் அறிமுகம்…

Byகாயத்ரி

Aug 19, 2022

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார்.

பலாப்பழ ஐஸ்கிரீம் ,குளிர்ந்த காபி, பாஸந்தி உள்ளிட்ட 10 பொருட்களின் விற்பனையை ஆவின் நிறுவனம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு ஆவின் நிறுவனத்தில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஆவின் குடிநீர் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இன்று பலாப்பழ ஐஸ் கிரீம், வெள்ளை சாக்லேட் ,வெண்ணைய் கட்டி, பாசுந்தி, ஆவின் வெண்ணை முறுக்கு , குளிர்ந்த காபி உள்ளிட்ட பத்து புதிய பொருட்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஆவி நிறுவனத்தில் இன்று 10 பொருட்களின் அறிமுகம் நிகழ்ச்சி நடந்தது

புதிய பொருட்களின் விவரம்

  1. பலாப்பழ ஐஸ்கிரீம் (Jackfruit Ice Cream) 125மி.லி – ரூ.45
  2. வெள்ளை சாக்லேட் (White Chocolate ) – 45 கிராம் – ரூ.30
  3. குளிர்ந்த காஃபி (Cold Coffee) – 200 மி.லி – ரூ.35
  4. வெண்ணெய் கட்டி (Butter Chiplets) – 200 கிராம் – ரூ.130
  5. பாசுந்தி (Basundi) – 100 மி.லி – ரூ.60
  6. ஆவின் ஹெல்த் மிக்ஸ் (Aavin Health Mix) – 250 கிராம் – ரூ.120
  7. பாலாடைக்கட்டி (Processed Cheese ) – 200 கிராம் – ரூ.140
  8. அடுமனை யோகர்ட் (Baked Yoghurt) – 100 கிராம் – ரூ.50
  9. ஆவின் பால் பிஸ்கட் (Aavin Milk Biscuit) -75 கிராம் – ரூ.12
    10.ஆவின் வெண்ணெய் முறுக்கு (Aavin Butter Murukku ) – 200 கிராம் – ரூ.80

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *