• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புஷ்பா படம் பார்த்த கமல்ஹாசன் நன்றி சொன்ன அல்லு அர்ச்சுன்

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த டிசம்பர் 17 அன்று வெளியான படம் ‘புஷ்பா’தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ், கன்னடம், மலையாளம், குந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.

அதன்பிறகே பல சினிமா பிரபலங்கள் படத்தைப் பார்த்து பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.நடிகர் கமல்ஹாசனும் தற்போதுதான் இப்படத்தை ஓடிடி தளத்தில் பார்த்துள்ளார். அது பற்றிய தகவலை படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்வெளியிட்டுள்ளார்.

“நேரம் ஒதுக்கி, புஷ்பா படத்தைப் பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர் சார். எங்கள் அனைவரின் வேலை குறித்து அன்பான வார்த்தைகளைத் தெரிவித்த உங்களுக்கு நன்றி,” என கமல்ஹாசன் படம் பார்க்கும் போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.புஷ்பாபடத்தைப் பார்த்துப் பாராட்டிய கமல்ஹாசனுக்கு படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.