• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாலிவுட் நடிகர்களை தாக்கும் கொரோனா…

Byகாயத்ரி

Jan 3, 2022

இந்தியா முழுவதும் டெல்டா வகை கொரோனாவும், ஒமைக்ரானும் பரவத் தொடங்கியுள்ளதால் பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இதனால், மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளர் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஜான் ஆபிரகாம் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.