• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

இங்கிலாந்தில் ஒரே நாளில் 32,322 பேருக்கு கொரோனா பாதிப்பு

Byமதி

Nov 9, 2021

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 93,33,891 ஆக உயர்ந்துள்ளது.தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 76 லட்சத்து 29 ஆயிரத்து 990 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 15,62,039 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.