• Sat. Apr 27th, 2024

ஸ்பேஸ் வாக் செய்த முதல் சீன் பெண்!

Byகாயத்ரி

Nov 9, 2021

சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும்.

இந்நிலையில், சீனா தங்களுக்கு என்று தனியாக விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி வருகிறது. இதற்கு, டியாங்யாங் விண்வெளி ஆராய்ச்சி மையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 425 கிமீ உயரத்தில் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இதன் நீளம் 20 மீட்டர் ஆகும். இதன் முழு கட்டுமானம் இன்னும் முடியவில்லை.

இதற்காக சீனா தொடர்ந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.ஷென்ஷோவ் 13 மிஷனின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை சீனா இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக அனுப்பி உள்ளது.

முன்னதாக ஷென்ஷோவ் 12 மிஷன் மூலம் 3 விண்வெளி வீரர்கள் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக விண்வெளிக்கு சென்றுவிட்டு 3 மாதம் இருந்துவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில் ஷென்ஷோவ் 13 மிஷன் மூலம் மேலும் 3 விண்வெளி வீரர்கள் டியாங்யாங் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுவதற்காக விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் 6 மாதம் விண்வெளியில் இருப்பார்கள். ஷாய் ஷியாங், வாங் யாப்பிங், யே குவாங்பு ஆகியோர் விண்வெளிக்கு சென்றுள்ளனர். இவர்கள் 6 மாத கால ஆராய்ச்சியில் மொத்தமாக 6 மணி நேரம் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்ய உள்ளனர். நேற்று முதல் கட்டமாக சில நிமிடங்கள் இவர்கள் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்தனர்.

ஸ்பேஸ் ஸ்டேஷனின் வெளிப்புற கட்டமைப்பை மேற்கொள்வதற்காக இவர்கள் ஸ்பேஸ் வாக் செய்தனர். சீன விண்வெளி வீராங்கனை வாங் யாப்பிங்கும் இதில் ஸ்பேஸ் வாக் செய்தார். இதன் மூலம் சீனாவிற்காக ஸ்பேஸ் வாக் மேற்கொண்ட முதல் பெண் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

சீன வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனை ஆகும். 12 நிமிடங்கள் இவர் விண்வெளியில் ஸ்பேஸ் வாக் செய்துள்ளார். வரும் நாட்களும் மேலும் ஸ்பேஸ் வாக் செய்ய உள்ளார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதிதான் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தின் கோர் மாடலை சீனா விண்ணுக்கு ஏவியது. விரைவில் இதன் கட்டுமானம் முடிய உள்ளது. சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் செயல் இழந்த பின், செயல்பாட்டில் உள்ள ஒரே ஸ்பேஸ் ஸ்டேஷனாக டியாங்யாங் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *