• Tue. Sep 26th, 2023

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 14, 2023

இதய நோய்க்கு அருமருந்தாகும் பச்சை ஆப்பிளின் நன்மைகள்:

ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது.
இது மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகப்படியான வைட்டமின், மினரல், நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் என வரிசையாக எல்லா ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்த வகை ஆப்பிள் வகைகளை கொரோனா காலத்தில் அதிகம் வாங்க ஆரம்பித்தனர். அதற்குக் காரணம் உடலில் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரிக்கும்.
அதுபோல உடல் உறுப்புகளையும் பலப்படுத்தும். பச்சை ஆப்பிள்களை சாப்பிடுவதால் இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. ஒரு வார காலகட்டத்தில் சில பச்சை ஆப்பிள்கள் மட்டும் சாப்பிட்டு வந்தால் டைப் டூ சர்க்கரை நோய் ரத்தத்தில் அதிகரிக்கும் அபாயத்தை குறிக்கின்றது.
இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருக்கின்றது. இதனால் ஜீரண சக்தி அதிகரித்து அஜீரணக் கோளாறு பிரச்சனைகளை குறைக்கிறது. அது போல மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றிற்கும் அருமருந்தாகும். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்து சர்மம் சார்ந்த புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் வைட்டமின் ஏ கண் பார்வையை தெளிவாக மாற்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *