சோயா உருண்டைக்குழம்பு:
தேவையான பொருட்கள்:
சோயா : 1 கப், உளுந்தம் பருப்பு : 1ஃ4 கப், துவரம் பருப்பு : 1ஃ2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1ஃ4 கப், பூண்டு : 4 பல், புளி : எலுமிச்சை அளவு, தக்காளி : 1ஃ4 கிலோ பொடியாக நறுக்கியது, தேங்காய் பால் : 1ஃ2 கப்
தாளிக்க :
சீரகம் : 1 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சோம்பு : சிறிதளவு, வெந்தயம், கறிவேப்பிலை : சிறிதளவு, அன்னாசிப் பூ, பட்டை :தலா இரண்டு, மஞ்சள் தூள்:சிறிதளவு , காரப்பொடி : சிறிதளவு, தனியாத் தூள் : சிறிதளவு, உப்பு:தேவையான அளவு, எண்ணெய் : சிறிதளவு
செய்முறை:
சோயா, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, சீரகம் சேர்த்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து, வதக்கி பின்னர் புளியை கரைத்து ஊற்றவும். கொதி வந்த பின்னர் சோயா உருண்டைகளை போட்டு கொதிக்க விடவும். இறக்குவதற்கு முன்பு அரை கப் தேங்காய் பால் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.