ஆனியன் சப்ஜி:
தேவையான பொருட்கள் :
பெரிய வெங்காயம் - 3, சின்ன வெங்காயம் - 5, பச்சை மிளகாய் - 4, பூண்டு - 5 பற்கள், இஞ்சி – சிறிதளவு, எண்ணெய் - 4 தேக்கரண்டி, பட்டை - 2 துண்டு, கிராம்பு – 2, ஏலக்காய் - 1, சோம்பு – அரைஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு - தேவையானஅளவு
செய்முறை :
முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து, ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளியுங்கள். பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பின்னர் வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறு தீயில், தண்ணீரே ஊற்றாமல், எண்ணெயிலேயே நன்றாக சுருளும் வரை வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். சுவையான ஆனியன் சப்ஜி தயார்.