• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Aug 31, 2022

பிள்ளையார்பட்டி மோதகம்:

தேவையான பொருள்கள்

பச்சரிசி – 1 டம்ளர், பாசிப்பருப்பு – கால் டம்ளர், தண்ணீர் – இரண்டரை கப், நெய் – சிறிதளவு, தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:
முதலில் பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாக நீரில் அலசி ஊற வைக்க வேண்டும். பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு அதை ஒரு வெள்ளைத்துணியில் போட்டு காயவிடவும். கொஞ்சம் ஈரமாக இருந்து கையில் ஒட்டாமல் கீழே விழுந்தால் அது தான் பதம். இப்போது அதை எடுத்து ஒரு மிக்சியில் போட்டு கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அந்த மாவை கடாயை சூடுபண்ணி, நன்றாக உதிரியாக வரும் வரை வறுத்து எடுக்கவும். இதை ஒரு டப்பாவில் போட்டு முதலிலேயே தயார் செய்தும் வைக்கலாம்.
இப்போது காய்ந்து கொண்டு இருக்கும் மாவுடன் இரண்டரை கப் தண்ணீரை சேர்த்து கிளறவும். 1 டம்ளர் அரிசிக்கு 1 டம்ளர் வெல்லப்பாகு தயார் செய்யுங்க. இப்போ அரிசி மாவானது பசை பதத்திற்கு வந்ததும் தீயைக் குறைத்துக் கொள்ளவும். அதைத் தனியாக எடுத்து மூடி வைங்க. தண்ணீர் வற்றி ட்ரை ஆனதும் அதனுடன் தயாரித்து வைத்த வெல்லப்பாகை ஊற்றவும். இது சூடாக இருக்கும்போது கொஞ்சம் இளகிப்போய் தான் இருக்கும். ஆறியதும் நல்லா கெட்டியாகிவிடும். இப்போ அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆறியதும் உருண்டை பிடிக்கலாம். அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள், கால் கப் தேங்காய் துருவலை மிக்சியில் பரபரவென அரைத்து அதனுடன் சேர்க்கவும். அதனுடன் கொஞ்சமாக வாசனைக்காக நெய் சேர்த்து, நன்றாக கலந்து விடுங்க. இப்பொழுது சின்ன சின்ன உருண்டையாகப் பிடித்து கொழுக்கட்டையை இட்லி குக்கரி;ல் வைத்து வேக வைக்கவும். நன்றாக வேக வைக்கவும். சுவையான பிள்ளையார்பட்டி மோதகம் தயார்.