• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்புகள்:

Byவிஷா

Jul 31, 2023

மாதுளம் பழ சட்னி :

தேவையான பொருட்கள்:

மாதுளம் பழம் – 1
புதினா தழை – 1 கைப்பிடி
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
இஞ்சி – சிறிய துண்டு
பச்சைமிளகாய் – 3
வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்

செய்முறை:
முதலில் கொத்தமல்லி தழை, பச்சைமிளகாய், இஞ்சி, புதினாவை எடுத்து பொடியாக நறுக்கியபின் நன்கு சுத்தம் செய்து கழுவி கொள்ளவும். பின்பு மாதுளம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி அதிலுள்ள முத்துக்களை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கியபின் இறக்கி ஆறவைக்கவும். பிறகு மிக்சிஜாரில் வதக்கி ஆற வைத்த கலவை, மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்து பரிமாறினால், ருசியான மாதுளம் பழ சட்னி ரெடி. தேவைபட்டால் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்தும் கொள்ளலாம். மேலும் இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு ஏற்றது.