


தேவையானவை:
தக்காளி சூப் – 200 மி.லி, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – சிறிய உருண்டை, நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மிக்ஸியில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்துப் பொடித்து, புளியைக் கரைத்து ஊற்றி அரைக்கவும். இதனுடன் தக்காளி சூப், உப்பு சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும்.


