• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு: பச்சைப்பயறு துவையல்

Byவிஷா

Jan 27, 2022

தேவையானவை:
பச்சைப்பயறு – அரை கப், பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, புளி – கோலி அளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.