• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் பகுதிகளில் தொடரும் மின்வெட்டு..!

Byவிஷா

Apr 17, 2023

கொடைக்கானல் பகுதிகளில் வார விடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் திட்டமிட்டு தொடர்ந்து மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 11 வாரமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் அதிகாலை 6 மணி முதல் ஏறக்குறைய முற்பகல் 12.45 மணி வரை திட்டமிட்டே மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் கேட்டால் அவருடன் பணியாளர்களுக்கு கூட தெரியாது என்கிறார்கள். அவருடைய உதவியாளரும் தொடர்பு கொள்ளும் நிலையில் இருப்பதில்லை. சம்பந்தபட்ட அதிகாரியோ இன்னும் கொஞ்சம் நாள் அப்படித்தான் இருக்கும் என்கிறார்.
கோடை காலம் தொடங்கியுள்ள இந்த சூழலில் மின் சாரத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மின்கட்டணம் செலுத்த தவறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள். பழுதை சரிசெய்ய மட்டும் தயங்குகின்றனர்.
இந்த பகுதியில் காட்டேஜ் அதிகம் உள்ளது. இந்நிலையில் அவர்களிடம் பழுதை சரிசெய்கிறேன் என்று பணம் பிடுங்கத்தான் மின்வாரியத்தினர் அடிக்கடி மின்தடை செய்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தயவுசெய்து இந்த குறையை உடனடியாக சரிசெய்ய சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.