• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல்: வன வளம் பாதிப்பு..,

ByS.Ariyanayagam

Mar 6, 2026

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட வத்தலகுண்டு வனச்சரகத்திற்கு கட்டுப்பட்ட கொடைக்கானல் கீழ் மலை பகுதியான மணலூர் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டி கடத்தல் நடக்கிறது.

குறிப்பிட்ட மரங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு பல்வேறு அரிய வகை மரங்களை வெட்டி கடத்துவதாகவும் வெட்டப்பட்ட மரங்களின் எந்த ஒரு வனத்துறை வருவாய்த்துறை குறியீடு இல்லாமல் கொண்டு செல்வதாகவும் அதிக பாரத்துடன் குறுகிய மலை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்வதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலை கீழ் மலை பகுதிகளில் மரங்களை வெட்டி கடத்தப்படுகிறது. தற்போது மழை இல்லை விவசாயம் அழிந்து வருவதாகவும்
மரத்தை வெட்டினால் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்ததால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வறட்சியை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறையும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.