

சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.கே. உமாதேவன், நாகராஜன், அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ -கே.கே. உமாதேவன் பேசும் போது : பொதுச் செயலாளர் எடப்பாடி தான் ,அவர்தான் முதலமைச்சர் இதில் எந்த மாறுபட்ட கருத்து எதுவுமில்லை.கீழே உள்ள அடிமட்ட தொண்டனை அரவணைத்து செல்ல வேண்டும்.எம்ஜிஆர் அம்மா தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நாம நிர்வாகிகள் இடையே பேசி எந்த பலனும் இல்லை கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தியுங்கள் என்றார். இளைஞர்களை அரவணைத்து சென்றால் நம்மை யாரும் அழிக்க முடியாது என்றார்.

தொடர்ந்து முன்னாள் கதர் மற்றும் காதித்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசும்பொழுது : .நம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் அதற்காக பாடுபட வேண்டும். மக்களை நம்ப முடியவில்லை. இந்த வண்டிலயும் எறுகிறான் .அந்த வண்டியிலும் ஏறுகிறான் .ரூபா கேட்கிறான் குவாட்டர் கேக்குறேன். சாப்பாடு கேட்கிறேன் எந்த கட்சிக்கு எப்பொழுது யாருக்கு ஓட்டு போட போறான்-னு தெரியல இது கிராமங்களில் நடக்குது. ஊராட்சி மன்றத் தேர்தலில் கூட அதிகமா சொந்த பந்தங்கள் இருக்கிறவர்கள் தான் வெற்றி பெறுகிறார்கள் இப்ப அப்படி எல்லாம் கிடையாது. யாரு 2000 கொடுக்கிறார்களே அவர்களுக்குத்தான் ஒட்டு வரும் தேர்தல்களில் எல்லாம் கூடுதலாகி விடும் என்றும் கூறினார். அந்த அளவுக்கு கிராம மக்கள் கிட்ட அரசியல் இல்ல. நாம எப்படி வெற்றி பெறுவது என்று யோசிக்கணும். நம்ம கட்சி கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள்.ரெண்டு பேரும் சும்மா இருக்காம இரண்டு பேட்டி கொடுத்துட்டாங்களாம் அதனை நாலு நாளா நம்ம கட்சியை கலங்கப்படுத்துவதற்கு இன்று வரை பேப்பர் ஊடகங்கள் ஆர்வம் காட்டுறாங்க என்றார். பேட்டி கொடுத்தவர்களை அப்பாசாமி ஆள விடுங்கன்னு சொல்லியாச்சு இன்னும் விட்ட பாடு இல்ல. வீட்ல ஆள காணோம்? ஆலோசிக்கிறாரா? ஏதோ ஒரு வார்த்தை வருத்தத்தில் சொன்னால் அதை இந்த ஊடகங்கள் நம்ம கட்சியை மட்டும் தான் போடுறாங்க. என்னமோ கட்சியே போன மாதிரி போடுறாங்க வருத்தமா இருக்கு. எத்தனையோ குற்ற சம்பவங்கள் நாட்டில் நடக்குது அதை எல்லாம் எழுதுறதுக்கு ஆள காணோம் சுட்டி காட்டல என்று குற்றம் சாட்டினர்.நீங்க எல்லாம் கட்சியை மீண்டும் ஆட்சியை பிடிக்க உழைக்க வேண்டும்.

அத விட்டுட்டு நம்ம கட்சி ல கூட்டணி இல்ல! எப்படி ஜெயிக்க முடியும்?நாம ஜெயிக்க மாட்டோம் என்று நம்ம ஆட்களே பேசுறது கூடாது நம்பிக்கை வேணும் என்றார் கூட்டணி பலமா அமைக்கிறோம் எல்லா கட்சியும் நம்மளோட கூட்டணி வருவதற்கு இருக்கிறார்கள் கூட்டணி அமைக்கிறோம், நாம் தான் ஆட்சிக்கு வருகிறோம். அதற்கான பணிகளை செய்ய பாடுபடுங்கள் என்றார்.
.

