விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியார் பிறந்தநாள் வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. பிறந்தநாள் விழாவை விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழகம் சார்பில், சிறப்பாக கொண்டாடுவது எனவும், எடப்பாடியார் தமிழகம் ஆள வேண்டும் எனவும் இறைவன் அருள் புரிய வேண்டும்
சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய பகுதியிலுள்ள நான்கு அரசு மருத்துவமனைகளில் 1500 இளைஞர்கள் சார்பில் 1500 யூனிட் ரத்தம் வழங்குவது எனவும், எடப்பாடியார் நீண்ட ஆயுளுடன் இருக்க வரும் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் 6 மணி அளவில் சிவகாசியில் அருள்மிகு விஸ்வநாதர் சுவாமி, விசாரிச்சம் அம்மன் கோவிலில் மாலை 7 மணி அளவிலும், விருதுநகரில் உள்ள பாலசுப்பிரமணியன் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடத்துவது எனவும், சிவகாசியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாலை 6 மணி அளவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்துவது எனவும், 11ஆம் தேதி திருத்தங்கல் மதியம் 12 மணியளவில் தேவர் சிலை அருகிலும், விருதுநகர் சொக்கநாதர் சுவாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்துவது எனவும், 12 ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் சிவகாசியில் உள்ள சிஎஸ்ஐ ஆதரவற்றோர் பள்ளியில் மதிய உணவு வழங்குவது எனவும், மல்லி மயூரநாதர் கோவில் பக்தர்கள் உள்பட 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவது எனவும், மே 12 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுளள அனைத்து கோவில்கள் தேவாலயங்கள் மசூதிகளில் மற்றும் பிரசித்து பெற்ற திருத்தலங்களிலும் எடப்பாடியார் நீடூழி வாழ வேண்டுமென சிறப்பு பூஜைகள் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறுபான்மை நலபிரிவு பொருளாளரும், மேற்கு மாவட்ட பூத்துக் கமிட்டி பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன், சிவகாசி முன்னாள் யூனியன் சேர்மன் சுப்பிரமணியன், பிலிப்பாசு, சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத்து கமிட்டி பொறுப்பாளர் பலராமன் மற்றும் அதிமுக கிளைக் கழகம், இளைஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.