• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பத்திரகாளி அம்மன் கோவிலில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் – கே.டி.ராஜேந்திர பாலாஜி

ByK Kaliraj

May 7, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பத்திரகாளி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பொங்கல் திருவிழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் அதிமுக மேற்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறைகளின் சார்பாக 12 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே .டி. ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.