கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர் சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய செல்வ பெருந்தகை :-
ஈரோடு இடைத் தேர்தலில் நாளை பிரச்சாரம் செய்வதற்காக காங்கிரஸ் பேரியக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பணிக் குழு அனைவரும் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி, இந்திய கூட்டணியில் வெற்றி வேட்பாளர் தி.மு.க சந்திரகுமார் அவர்களை ஆதரிக்க பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறோம். தொடர்ந்து ஐந்தாம் தேதி தேர்தல் நடைபெறும் வரை முன்னணி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஈரோடு இடைத் தேர்தலை பொறுத்த வரை ஜனநாயக நாட்டில் போட்டி போடுவது அந்தந்த கட்சி முடிவு. அதற்கு கருத்து சொல்வதில்லை மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணை பாதுகாக்க வேண்டிய தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் இருந்து வருகிறார். பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெறுவார்கள்.
10 மாதம் இந்த இடைத் தேர்தல் மார்ச் மாதம் பதவியேற்பார். ஜனவரி பொதுத் தேர்தல் நடைபெற அறிக்கைகளும் வரும். தி.மு.க கேட்டதற்கு இணங்க அகில இந்திய தலைமை அவர்கள் போட்டியிட்டு இருக்கும் என முடிவு செய்தது.
விட்டுக் கொடுப்பது கேட்டு பெறுவதும் அவரவர்களுடைய உடன்பாடு, அவருடைய இயக்கம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வேலை செய்து வருகிறார்கள்.
அண்ணாமலை கிழக்கப் போ, என்றால் மேற்குப் போவார்,
விஜய் திராவிட முன்னேற்றக் கழக தொடர்ந்து தாக்கி கொண்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு ?
அவருடைய கட்சி வியூகம் அதனுடைய கொள்கை, கோட்பாடு, அம்பேத்கர், பெரியாரையும், காமராஜரையும் பற்றி பேசுகிறார், சமூக நீதி பேசுகிறார், சமூக நீதி பற்றி பேசுவது இந்திய கூட்டணி.
யாரை விமர்சிக்க வேண்டும், யாரை ஆதரிக்க வேண்டும் அவருடைய கொள்கை தான். இந்திய கூட்டணியை கொள்கை அப்போ இங்கு இருக்க வேண்டியது தான் என கேட்டோம்.
கோமியம் பற்றி அவர் வாயை திறக்க மாட்டார், உலகமே திரும்பிப் பார்க்கின்ற ஐ.ஐ.டி ஜவகர்லால் நேரு அவர்களால் துவக்கப்பட்ட, இயக்குனர் காமகோடி கோமியம் குடியுங்கள் என சொல்கிறார்.
காமகோடி மாணவர்களுக்கு எதை சொல்லிக் கொடுக்க வேண்டுமா ? அதை சொல்லிக் கொடுக்காமல், மூட நம்பிக்கையை சொல்லிக் கொடுக்கிறீர்கள்.
விஞ்ஞானம் எங்கு வளர்ந்து வருகிறது. இந்த காலத்தில் கோமியம் குடியுங்கள் என சொல்கிறார்கள், அக்கா தமிழிசை சொல்கிறார். ஐ.ஐ.டி இயக்குனர் சொல்கிறார். இது தான் பாரதிய ஜனதா அரசியல், அனைவரையும் முட்டாளாக்குவது மாட்டுக் கறி ஒரு இறைச்சி, கோமியம் ஒரு கழிவு என்றார்.
பா.சிதம்பரம் தாயார் பற்றி பேசி அழுதார் அது தேசத்தின் குரலாக ஒரு சிறந்த எக்கனாமிக்ஸ் இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங் அவர்கள் கட்டி அமைக்கும் போது அவர் உறுதுணையாக இருந்தவர். பத்தாண்டுகள் நிதி அமைச்சராக, உள்துறை அமைச்சராகவும் இந்த தேசத்திற்கு பாடுபட்டவர். நிதி அமைச்சராக டாக்டர் மன்மோகன் சிங் இருக்கும் போது வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து என்னென்னல்லாம் இந்திய மக்களுடைய வருமானத்தை பெருக்க வேண்டும். அந்த திட்டங்களுக்கு எல்லாம் பாடுபட்டவர். அப்படிப்பட்டவர், தமிழ்நாட்டில், இருக்கின்ற வெள்ளை வேட்டி கட்டிய ஒரு அப்பழுக்கற்ற ஒரு தலைவராக தான் தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்க்கிறார்கள். அவர்கள் உணர்வு பூர்வமாக பழகக் கூடியவர், யாரிடம் பழகினாலும் உண்மையாக பேரன்போடு பழக கூடியவர். அவர் தாயாரை பற்றி அவர் பதிவு செய்யும் போது, அவர் கண்ணீர் சிந்தினார் என்பது அவருடைய பாசத்தையும், அன்பையும் உடைய மதிப்பையும், மரியாதையும் அவர்கள் வெளிப்படுத்தி இருக்கலாம்.
பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி நடக்கும் போது. வேந்தரா ? யார் இருக்கனும் என தெரிவித்தார்.
படிப்பதற்காக லண்டன் போகிறார்கள், அதற்கு காது மூக்கு அனைத்தும் வைப்பார்கள் என்றும், கூறினார்.