
நாம் தமிழர் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தமிழ்நாடு முழுவதும் பாலியல் சம்பங்களில் கனிமொழி வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
சீமான் ஆவேசம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட பகுதிகளில் மலைகளை உடைத்து ஒரு லட்சம் டன் கற்கள் கர்நாடக விற்கு செல்கிறது. கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையை பாதியை தூண்டித்து எடுத்து சென்று விட்டனர். இதை தடுக்க வழியில்லை. திருநெல்வேலியில் மலைகளை அழித்து முடித்து விட்டனர். தென்காசியில் மலைகளை கற்களாகவும் மணல்களாக எடுத்து செல்வது அதிகமாக உள்ளது. தென்காசி மக்கள் இதை தடுக்க வர வேண்டும் என கூறினார்.
மலை என்பது பூமி தாயின் மார்பு. மலையில் இருந்து அருவி, அறு, நீர், சோறு, உயிர், வாழ்க்கை என்ற அறிவியலை உணர்கிறீகளோ அபோது மலை கற்கள், மணல் அல்ல உணர தொடங்குவீர்கள். மலை இல்லை என்றால் மழையை பெற முடியாது. மழை நீர் இல்லை என்றால் நிலம், வளம் இல்லை. இவை இல்லை என்றால் யாரும் இல்லை. அடிப்படை மலை என்பதை புரிந்து கொண்டு காக்க குரல் கொடுக்க வேண்டும். காடுகளை வெட்டி அழித்து விடுகிறார்கள். ஆனால் மரங்களை நட்டு வைத்தால் அடுத்த தலைமுறை பயன்படுத்திக்கொண்டு நீர் உலக உயிர்களின் தேவை. அதை விற்க சந்தை பொருளாக மாற்றி விட்டார்கள். தாயின் மார்பில் பால் குடிப்பது இயற்கை. ஆனால் மார்பை அறுத்து ரத்தம் குடிப்பது கொடுங்செயல்.
நீரை நாம் கடைகளில் வாங்கி குடிக்கிறோம். ஆனால் மற்ற உயிரினமோ என்னாகும் என்பதை யாரும் உணரவில்லை. நீரை விற்பனை செய்வதை தடை செய்யலாம்..
மலையை எப்படி உருவாக்க முடியும். உருவாக்க முடியாத ஒன்றை அழிக்க கூடிய உரிமையை யார் தந்தது. வளங்களை சொரண்டி கொடுப்பதை வளர்ச்சி என்று கற்பித்தது யார்?
5000 ஏக்கர் விளை நிலத்தை அழித்து வானுர்தி நிலையம் அமைப்பது தான் வளர்ச்சியா. வயிறு முழுவதும் பசியை வைத்து கொண்டு பறப்பது வளர்ச்சி கிடையாது.
