• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் காங்., வலுபெறுவது உறுதி….? இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டி…..

நீலகிரியில் காங்கிரஸ்கட்சி மீண்டும் வலுபெறுவது உறுதி என நீலகிரி இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டி
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தினகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இலக்கிய அணியின் நீலகிரி மாவட்ட தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.அதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் வெளியிட்டார்.இந்நிலையில் நீலகிரி மாவட்ட காங்., கட்சியினர் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் அரசியல் டுடே வுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில்,


“கடந்த 1957 மக்களவை தேர்தல் முதல் 2019 தேர்தல் வரை 7 முறை காங்., கட்சியே வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களே எம்.பி.,யாக நாடாளுமன்றத்தை அலங்கரித்துள்ளனர். அத்தகைய சிறப்பு மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு உண்டு இனிவரும் காலங்களில் இன்றைய இளைய தலைமுறையினரை காங்., கட்சியில் அதிகளவில் இணைத்து மீண்டும் நீலகிரி காங்., கட்சிக்கு வலு சேர்ப்போம் குறிப்பாக எதிர்வரும் 2024 நாடளுமன்ற தேர்தலில் கடுமையான பணியாற்றி மத்தியில் காங்., ஆட்சி அமைய பாடுபடுவோம்” என்றார்.