• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா…

Byகாயத்ரி

Nov 20, 2021

இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.


2021 ஆம் ஆண்ட நடந்த ஐபிஎல் சீசன் இந்தியாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


அதேநேரத்தில், தோனி 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட்டதால், அவரால் சென்னை அணியின் வெற்றிக்குப் பிறகு உடனடியாக இந்தியா வரவில்லை. இந்தச் சூழலில், உலகக்கோப்பை முடிந்ததும் தோனி தமிழ்நாடு வந்து ஐபிஎல் கோப்பையைத் தமிழ்நாடு முதல்வரிடம் அளிப்பார் எனவும், அந்த விழா சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


தற்போது, சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.அதாவது, உலகக்கோப்பை போட்டிகள் முடிந்து தோனி இந்தியா திரும்பியுள்ளதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா இன்று நவம்பர் 20ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடக்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.