• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

மோதல் வெடிக்கும் -இபிஎஸ்க்கு ஒபிஎஸ் கடிதம்

ByA.Tamilselvan

Jun 20, 2022

அதிமுக வில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஓபிஎஸ் ,மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.சில இடங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களிடமும் மோதல் வெடித்துவருகிறது. தற்போதைய சூழலில் இபிஎஸ்க்கு கூடுதல் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும் வரும் 23ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இபிஎஸ்க்கு ஒபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.கடிதத்தில் கூறியிருப்பதாவது.கடிதத்தினை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்தார்…மேதல் ஏற்படும் சூழலால்பொதுக்குழுவை தள்ளி வைக்கக்கோரி எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அதில் எங்களுக்கு 36 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. ஒற்றை த்தலைமை குறித்து பலரும் தன்னிச்சையாக பேசி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கருத்துக்களால் தொண்டர்கள் கொதித்து போயிள்ளனர்.இந்நிலையில் பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.