• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திறன் மேம்பாட்டு செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByP.Thangapandi

Jul 7, 2026

தமிழ்நாடு முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை கண்காணித்து, மருத்துவ சேவையின் தரத்தை மேம்படுத்தி கிராமபுற மக்களின் நலனுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் திறன் மேம்பாட்டு செவிலியர்கள்.,

இந்த செவிலியர்கள் மட்டுமல்லாது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரவல் அடிப்படையில் கூடுதல் பணிகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.,

இந்த நடவடிக்கைக்கு எதிரான கடந்த ஆட்சியின் போதே பல்வேறு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத சூழலில், தற்போதைய அரசும் இந்த பணி நிரவல் நடவடிக்கையை தொடர்வதால் பணி சுமைக்கு ஆளாகி வருவதாகவும்., ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்த பணி நிரவல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறன் மேம்பாட்டு செவிலியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.,