• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் ,வனத்துறையினர் துன்புறுத்துவதாக புகார்

நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் துன்புறுத்துவதாக மாவட்ட மாற்றுத்திறனாளி கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு…
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதைகளில் கடைகள் வைத்து தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.இந்நிலையில் நடைபாதைகளில் கடைகள் வைத்துள்ள மாற்றத்திறனாளிகளிடம் காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், வனத்துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் லஞ்சம் கேட்டு துன்புறுத்துவதாகவும் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அமிர்த்திடம் புகார் மனு ஒன்று அளித்தனர்.மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.