புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுக்கா கோனாபட்டு மாவூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர் அதே பகுதியில் அரசின் முறையான அனுமதி பெற்று கடந்த 15 ஆண்டுகளாக கல்குவாரி நடத்தி வருகிறார்.

இவரிடம் இருந்து பல்வேறு கிரஷர் உரிமையாளர்கள் சக்கை எனப்படும் மூலப்பொருள்களை வாங்கி கிரஷர் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜ் நடத்தி வரும் கருக்காரி அருகே உள்ள இரண்டு கிரஷர் உரிமையாளர்கள் கல்குவாரியை முழுமையாக தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் தினந்தோறும் தன்னை கொள்ள துப்பாக்கி மற்றும் அருவாள் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் சுற்றி வருவதால் தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கல்குவாரி உரிமையாளர் செல்வராஜ் புகார் வழங்கியது.
ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளுக்கு எதிராக புகார் மனு வழங்கி ஒரு வாரத்தில் கொலை செய்யப்பட்டார். தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவம் அடங்குவதற்குள் தற்பொழுது புதிதாக கல்குவாரி அதிபர் ஆட்சியரகத்தில் புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.